நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி20 போட்டியில் விளையாடி வருகிறது.அதனடி நேற்று இந்தியா- நியூஸிலாந்து இடையே நான்காவது டி 20 போட்டியானது வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் டிம் சௌத்தி பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார். இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளனர்.
முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்தது. 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிரங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் அடித்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.இதைத்தொடர்ந்து சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய நியூஸிலாந்து அணி 13ரன்கள் எடுத்தது.அடுத்து களமிரங்கிய இந்திய அணி 20 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டம் குறித்து கோலி கூறுகையில் கடந்த இரண்டு ‘டை’ ஆட்டங்களில் இருந்து புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டு உள்ளேன். எதிர் அணியினர் நன்றாக ஆடும்போது பொறுமை காத்து கடைசியில் மீண்டெழுகின்ற அந்த வாய்ப்பைத்தான் கூறுகிறேன்.இது போல விறுவிறுப்பான ஆட்டத்தினை ஆடுவது மகிழ்ச்சியாக உள்ளது . இதற்கு முன் சூப்பர் ஓவரில் ஆடியதில்லை, ஆனால் த்ற்போது தொடர்ச்சியாக 2 சூப்பர் ஓவரில் வென்று உள்ளோம். இது நம் அணியின் ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
விறுவிறுப்பான இந்த சூப்பர் ஓவரில் முதலில் சாம்சனையும் ராகுலையும் தான் அனுப்புவதாக முடிவாக இருந்தது ஆனால் ராகுல் என்னிடம் நீங்கள் இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். என் அனுபவம்,களத்தில் ஆடும் விதம் உதவும் என்றார், இதனை அடுத்தே நானும் ராகுலும் களத்தில் இறங்கினோம், ராகுலின் 2 அதிரடி அடி முக்கியமாக அமைந்தது, மறுபக்கம் சைனி மீண்டும் தனது வேகத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இத்தைய சுவரஸ்சியம் நிறைந்த வெற்றிகள் பெருமை அளிக்கின்றது என்று பெருமிதம் பொங்க தெரிவித்தார்.
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…