Virat Kohli [File Image]
INDvsSA: நடப்பு ஐசிசி உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் 36 லீக் போட்டிகள் இதுவரை முடிவடைந்து உள்ள நிலையில் 37-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை செய்து வருகின்றன.
இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததால், தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவதாக களமிறங்க நேர்ந்தது. இது தென்னாப்பிரிக்காவிற்கு சற்று சிக்கலாக இருந்தது. ஏனென்றால் தென்னாப்பிரிக்கா இதுவரை வெற்றி பெற்ற போட்டியில் முதலாவதாக களமிறங்கியுள்ளது.
இந்திய அணியில் முதலில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். ஆரம்பம் முதலே ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி சிக்ஸர், பௌண்டரி என அடித்து விலாசினார். அவருடன் இணைந்து சுப்மன் கில் நிதானமாக விளையாடினார்.
சிறிது நேரத்தில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ரோஹித் சர்மா, ரபாடா வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதனை அடுத்து விராட் கோலி களமிறங்கி பொறுப்பாக விளையாடி அணியை முன்னிலைக்கு எடுத்துச் சென்றார்.
ஒருபுறம் சுப்மன் கில் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபுறம் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கி விளையாடி பவுண்டரிகளை பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து விராட் கோலி மற்றும் ஸ்ரேயா செய்யர் இருவரும் இணைந்து விளையாடி சிறப்பாக விளையாடினர். ஒரு கட்டத்தில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
இதன் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் களமிறங்கி சொற்ப ரன்களில் வெளியேறினார். அவரை அடுத்து விளையாட வந்த சூர்யகுமார் யாதவ் ஓரளவு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கிடையில் அதிரடி காட்டி விளையாடிக் கொண்டிருந்த விராட் கோலி தனது 49 ஆவது ஒருநாள் சதத்தை அடித்து அசத்தினார்.
முடிவில் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 326 ரன்கள் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 101* ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும், ரோஹித் சர்மா 40 ரன்களும் எடுத்துள்ளார்கள். இப்போது தென்னாப்பிரிக்கா அணி 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கவுள்ளது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…