IPL MI vs GT: குஜராத் அணி அதிரடி ஆட்டம்..! மும்பை அணிக்கு இதுவே இலக்கு..!

Published by
செந்தில்குமார்

ஐபிஎல் தொடரில் இன்றைய MI vs GT போட்டியில், முதலில் பேட் செய்த குஜராத் அணி 207/6 குவித்துள்ளது.

16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி, குஜராத் அணியில் முதலில் விருத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். விருத்திமான் சாஹா களமிறங்கிய வேகத்தில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், சுப்மன் கில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து, களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 13 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இதன்பின், அதிரடியாக களமிறங்கிய டேவிட் மில்லர் மற்றும் அபினவ் மனோகர் அணிக்கு ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த அபினவ் மனோகர் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் அரைசதம் அடிப்பார் என்று  எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

முடிவில், குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்துள்ளது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 56 ரன்களும், டேவிட் மில்லர் 46 ரன்களும், அபினவ் மனோகர் 42 ரன்களும், ராகுல் தெவாடியா 20 ரன்களும் குவித்துள்ளனர். மும்பை அணியில் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

9 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

10 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

10 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

11 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

11 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

12 hours ago