இன்றைய 34-வது போட்டியில் டெல்லி Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக சாம் கரண், டு பிளெசிஸ் இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் சாம் கரண் 2 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், ஷேன் வாட்சன் களமிறங்க நிதானமாக விளையாடி வந்த வாட்சன் 36 ரன் எடுத்து வெளியேறினார்.
அதிரடியாக விளையாடி வந்த டு பிளெசிஸ் அரைசதம் அடித்து 58 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து, களம் கண்டார். ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு இருவரும் கூட்டணி அமைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கடைசிவரை களத்தில் ரவீந்திர ஜடேஜா 33*, அம்பதி ராயுடு 45* ரன்களுடன் நின்றனர். இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணி 180 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், பிருத்வி ஷா களமிறங்க பிருத்வி ஷா ரன் எடுக்காமல் வெளியேறினார்.
பின்னர், இறங்கிய ரஹானே 8 , ஸ்ரேயாஸ் 23 ரன்கள் எடுத்து பெவிலியன் சென்றனர். இதைத்தொடர்ந்து, தொடக்க வீரராக களம் கண்ட ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தால் சதம் விளாசி 101 ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.
அதில், 14 பவுண்டரி , 1 சிக்ஸர் அடக்கும். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 185 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…