Team Pakistan [file image]
டி20I: 2024 ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரில் ‘A’ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியை தழுவி இருப்பது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது, பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றான சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு இந்திய அணியின் உதவி தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது, ‘A’ பிரிவில் இந்தியா அணி தற்போது 2 வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதே நேரம் அமெரிக்கா அணியும் 2 வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. அவர்களை தொடர்ந்து கனடா அணி ஒரு வெற்றியை பெற்று 2 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்து வருகிறது.
மேலும், எந்த வெற்றியும் பெறாமல் பாகிஸ்தான் அணியும், அயர்லாந்து அணியும் 4-வது மற்றும் 5-வது இடத்தில் இருந்து வருகிறது. இனி பாகிஸ்தான் அணிக்கு அயர்லாந்து அணியுடனும், கனடா அணியுடனும் போட்டி இருக்கிறது. இந்த 2 போட்டியையும் பெரிய ரன்கள் அடிப்படையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும்.
மேலும், அதே நேரம் அமெரிக்கா அணி, கனடா அணி இரு அணிகளும் மீதம் விளையாடும் 2 போட்டிகளையும் பெரிய ரன்கள் அடிப்படையில் தோற்க வேண்டும். இதனால் பாகிஸ்தான் அணி ரன்ரேட் அடிப்படையில் முன்னிலை வகிப்பார்கள். இதனால், இந்தியா அணி மீதம் கனடா அணியுடனும், அமெரிக்கா அணியுடனும் விளையாடவுள்ள போட்டியை பெரிதளவில் வெற்றி பெற வேண்டும் என பாகிஸ்தான் அணி ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…