முக்கியச் செய்திகள்

யுவராஜ் சிங், அனில் கும்ப்ளே ரெக்கார்ட்டை வீழ்த்தி ஜடேஜா செய்த சம்பவம்….!

Published by
murugan

நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இப்போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுலின் சதங்கள் மற்றும் ரோகித் (61), சுப்மன் கில் (51), கோஹ்லி (51) ஆகியோர் அரைசதம் மூலம் 50 ஓவரில் இந்தியா 4 விக்கெட்டை இழந்து 410 ரன்கள் குவித்தனர். 411 ரன்களை சேஸ் செய்த நெதர்லாந்து அணி 47.5 ஓவரில் 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய பந்துவீச்சில் முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப், ஜடேஜா ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் வரலாறு சாதனை படைத்துள்ளார்.

கும்ப்ளே (1996) மற்றும் யுவராஜ் (2011)  உலகக்கோப்பைகளில்  தலா 15 விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். இந்நிலையில், நடப்பு உலகக்கோப்பையில் 16 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றார்.

நடப்பு உலகக்கோப்பையில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா வீரர் ஆடம் ஜாம்பா முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியில் பும்ரா 17 விக்கெட்டுகளுடன் 5-வது இடத்திலும், 16 விக்கெட்டுகளுடன் முகமது ஷமி 8-வது இடத்திலும் உள்ளனர்.

Published by
murugan

Recent Posts

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

20 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago