நேற்றைய போட்டியில் ஜடேஜா 19-வது ஓவரில் 22 ரன்களை ஜடேஜா எடுத்து அணியை வெற்றி பெறச்செய்தார்.
ஐபிஎல் தொடரில் நேற்று 2 போட்டிகள் நடைபெற்றது. அதில் முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக திரிபாதி 45 ரன்களும், நிதிஷ் ராணா 37 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் , டு பிளசிஸ் வழக்கம் போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 28 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்த சில நிமிடங்களில் டு பிளசிஸ் 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த போது பிரசித் ஓவரில் விக்கெட்டை இழந்தார். இதனால், சென்னை முதல் விக்கெட்டை இழக்கும்போது 74 ரன்கள் சேர்த்தனர்.
பின்னர், மொயீன் அலி 32 ரன்களிலும், அம்பதி ராயுடு 10 ரன்னிலும் வெளியேற சுரேஷ் ரெய்னா, தோனி களத்தில் நின்றதால் சென்னை ரசிகர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை இருந்தது. ஆனால், வருண் சக்கரவர்த்தி ஓவரில் சின்ன தல ரெய்னா, தல தோனி இருவரும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், கொல்கத்தா அணிக்கு வெற்றி என்ற நிலை இருந்து. அப்போது, சென்னைக்கு 12 பந்துகளில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில், 19-வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசனார்.
முதல் இரு பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த 2 பந்தில் 2 சிக்ஸரை ஜடேஜா பறக்கவிட சென்னை ரசிகர்களுக்கு அப்போதுதான் மீண்டும் நம்பிக்கை வந்தது. அந்த நம்பிக்கையை சற்றும் குறைக்காமல் கடைசி இரு பந்தில் 2 பவுண்டரிகளை தெறிக்கவிட்டு அந்த ஓவரில் மட்டும் 22 ரன்களை ஜடேஜா எடுத்தார்.
கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட சுனில் நரைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், ஷர்துல் தாக்கூர் 3 ரன்கள் எடுக்க கடைசி பந்தில் தீபக் சாஹர் சிங்கிள் அடித்து அணியை வெற்றிப் பெற செய்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு சென்றது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…