இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் இறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 111.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 345 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 142.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 296 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில், நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரன் மத்தியில் களமிறங்கி 13 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இவரது விக்கெட்டை இந்திய வீரர் ஜடேஜா வீழ்த்தினார். இந்த விக்கெட்டை ஜடேஜா வீழ்த்திய பின்னர் இருவரின் ஒற்றுமைகள் குறித்து பல தகவல்கள் இணையத்தளத்தில் வைரலானது.
அதன்படி, இரண்டு வீரர்களும் ஜெர்சி எண் 8 ஐக் கொண்டுள்ளனர். இரண்டு வீரர்களும் இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள். இருவரின் பெயரிலும் ‘ரவீந்திரன்’ என்ற பெயரும் உள்ளது. மேலும் இரு வீரர்களும் இடது கையால் பேட் செய்கிறார்கள். பல ஒற்றுமைகள் உள்ளது.
மேலும், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் முதல் பெயரை சேர்த்து ரச்சின் என்று பெயரிடப்பட்டுள்ளது. ராகுலில் இருந்து ‘ஆர்’ என்ற வார்த்தையையும், சச்சினில் இருந்து ‘சின்’ என்ற வார்த்தையையும் சேர்த்து அவரது முதல் பெயர் உருவாக்கப்பட்டது.
அவரது பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், இருவரும் பல வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தனர். ரச்சினின் பெற்றோர் கிரிக்கெட்டை மிகவும் விரும்புகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் இந்திய அணியின் இரண்டு ஜாம்பவான்களின் பெயர்களை இணைத்து தங்கள் மகனுக்கு பெயரிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…