KKR vs GT: குர்பாஸ் அதிரடி பேட்டிங்; குஜராத் அணிக்கு வெற்றி பெற இதுதான் இலக்கு.!

ஐபிஎல் தொடரில் இன்றைய KKR vs GT போட்டியில், முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 179/7 ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து, வெளியேற அதன்பின் களமிறங்கிய ஷர்துல் தாக்குர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவரையடுத்து வெங்கடேஷ்(11) மற்றும் கேப்டன் நிதிஷ் ராணா(4) ரன்கள் எடுத்து வெளியேறினர்.
மறுபுறம் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாசிய குர்பாஸ் அரைசதம் அடித்து அசத்தினார். குர்பாஸ் 39 பந்துகளில் 81 ரன்கள்(7 சிக்ஸர், 5 போர்கள்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிங்கு சிங்(19) மற்றும் ரசல்(34) ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்துள்ளது. குஜராத் அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்களும், ஜோசுவா லிட்டில் மற்றும் நூர் அகமது தலா 2 விக்கெட்களையம் வீழ்த்தினர்.