ஐபிஎல் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிரான போட்டியில் 7 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி 165 ரன்கள் குவிப்பு.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரரான சுப்மான் கில் 7 ரன்கள் அடித்து வெளியேறினார். இதன்பின் வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 49 பந்துகளில் 67 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து, ராகுல் திரிபாதி 34 ரங்களில் அவுட்டான நிலையில், நிதிஷ் ராணா 18 பந்துகளில் 31 ரன்கள் அடித்து வெளியேறினார். பின்னரே தினேஷ் கார்த்திக், சுனில் நரைன் ஆகியோர் ஒரு சில ரன்களை சேர்ந்தனர். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் அணி பந்துவீச்சை பொறுத்தளவில் அர்ஷ்தீப் சிங் 3, ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த நிலையில் 166 ரன்கள் அடித்தால் பஞ்சாப் அணி வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…