RCBvsLSG [file image]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியாக இன்று பெங்களூரு அணியை, லக்னோ அணி எதிர்கொள்கிறது.
ஐபிஎல் தொடர் தொடங்கி தற்போது தினமும் ஒரு போட்டி நடைபெற்று பெற்று கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியானது பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக தொடங்குகிறது.
பெங்களூரு அணி கடைசியாக சின்னசாமி மைதானத்தில் கொல்கத்தா அணியுடனான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்த போட்டிக்கு வருகிறது. அதே போல லக்னோ அணி அவர்களது கடைசி போட்டியில் பஞ்சாப் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
அதனால், வெற்றியில் இருந்து வரும் லக்னோ அணி தற்போது தோல்வியடைந்து வரும் பெங்களூரு அணியை, பெங்களூரு அணியின் சொந்த மண்ணில் அதாவது சொந்த மைதானத்தில் வைத்து சந்திக்கிறது. பெங்களூரு அணி தோல்வியிலிருந்து வெளி வருவார்களா ? இல்லை லக்னோ தங்களது வெற்றி பயணத்தை தொடங்குவார்களா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் 4 முறை சந்தித்து உள்ளது, அதிலும் 3 முறை பெங்களூரு அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு முறை தான் லக்னோ அணி வெற்றி பெற்றுகிறது. கடைசியாக, கடந்த வருடம் இரு அணிகளும், விளையாடிய போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் அணி வீரர்கள் :
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), அல்சாரி ஜோசப், மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்.
லக்னோ அணி வீரர்கள் :
கே.எல். ராகுல் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), குயின்டன் டி காக், தேவ்தத் படிக்கல், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, மார்கஸ் ஸ்டோனிஸ், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…