தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்தஅணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்த ஆண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நோர்கியா சிறப்பாக பந்து வீசியுள்ளார். அவர் 5 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு டெஸ்டில் ஒவ்வொரு 37-வது பந்திலும் ஒரு விக்கெட் எடுத்துள்ளார். இந்த ஆண்டில் நோர்கியா இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 6/56 என்பது இந்த ஆண்டின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.
நார்ட்ஜே இல்லாததால் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு பலவீனமாக இருக்கும். அணியில் ககிசோ ரபாடா மற்றும் லுங்கி இங்கிடி இருந்தாலும், நோர்கியாவின் வேகம் நிச்சயமாக இந்திய பேட்ஸ்மேன்களை திரவைக்கும். நோர்கியா சமீபத்தில் ஐபிஎல் 2021இல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடினார்.
அப்போது அவரது வேகத்தால் அனைவரையும் கவர்ந்தார். இந்த காரணத்திற்காக, ஐபிஎல் 2022 இன் மெகா ஏலத்திற்கு முன்பு டெல்லி தக்கவைத்த 4 வீரர்களில் நோர்கியா ஒருவர் ஆவார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…