ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 32-வது போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மயங்க அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள ப்ரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேராக மோதியுள்ளது. அதில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 13 போட்டிகளிலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 15 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளது. அதேபோல பஞ்சாப் அணி, 6 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளது. இந்த போட்டி, இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக கருதப்படுவதால், இன்றைய போட்டி சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எதிர்பார்க்கப்படும் XI:
டெல்லி கேபிட்டல்ஸ்:
டேவிட் வார்னர், ப்ரித்வி ஷா, ரோவ்மேன் பவல், ரிஷப் பந்த் (கேப்டன் \ விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், சர்ஃபராஸ் கான், ஷர்துல் தாக்கூர், அக்ஸர் படேல், முஸ்தபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், கலீல் அகமது.
பஞ்சாப் கிங்ஸ்:
ஷிகர் தவான், மயங்க் அகர்வால் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜானி பேர்ஸ்டோவ், ஒடியன் ஸ்மித், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ககிசோ ரபாடா, ஷாருக் கான், வைபவ் அரோரா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…