#IPL2022: இன்று களம்காணவுள்ள டெல்லி – ஹைதராபாத்.. வெற்றிபெறப்போவது யார்?

Published by
Surya

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 50-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.

ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 50-வது போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள பிராப்டன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது.

ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 20 போட்டிகளில் நேருக்கு நேராக மோதியுள்ளது. அதில் டெல்லி அணி 9 போட்டிகளிலும், ஹைதராபாத் அணி 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. மேலும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஹைதராபாத் அணி 5 போட்டிகளிலும், டெல்லி அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் முன்னேறவும், பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையவும் இவ்விரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானதாக கருதப்படுவதால், இவ்விரு அணிகளும் சிறப்பாக ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் XI:

டெல்லி கேபிட்டல்ஸ்:

பிருத்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த், லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷஷாங்க் சிங், ஜே சுசித்/ஷ்ரேயாஸ் கோபால், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், நடராஜன்.

Published by
Surya

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

2 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

3 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

3 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

4 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

5 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

13 hours ago