இன்றைய ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய நிலையில், மும்பை அணி மீண்டும் தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலே நிலைத்து வருகிறது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 22-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. புனே MCA மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 198 ரன்கள் எடுத்தது. 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா – இஷாந்த் கிஷன் களமிறங்கினார்கள்.
தொடக்கத்தில் நிதானமாக ஆடிவந்த ரோஹித் சர்மா 28 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இருந்த இஷாந்த் கிஷன், 3 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய தேவால் அதிரடியாக ஆடி 49 ரன்கள் குவித்து வெளியேற, மறுமுனையில் இருந்த திலக் வர்மா 36 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து சூரியகுமார் யாதவ் களமிறங்க, தனது அதிரடியாக ஆட்டத்தை வெளிக்காட்ட ஆரமித்தார்.
அதிரடியாக ஆடிவந்த சூரியகுமார் யாதவ் 43 ரன்கள் அடிக்க, அவரையடுத்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் மும்பை அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலே இருந்து வருகிறது,
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…