ரஞ்சி டிராபிக்கான ஆட்டத்தில் பெங்கால் – ஐதராபாத் இடையிலான ஆட்டமானது மேற்கு வங்காளத்தில் உள்ள கல்யாணி என்கிற இடத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களமிரங்கிய அந்த அணி 60 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.அந்த நிலையில் 4வது விக்கெட்டுக்கு மனோஜ் திவாரியுடன் மஜும்தார் ஜோடிசேர்ந்தது.குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அணியை இந்த ஜோடி சரிவில் இருந்து மீட்டது. மனோஜ் திவாரி இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார். நேற்று முன் முதல் நாள் ஆட்டத்தில் பெங்கால் 5 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் குவித்து இருந்தது.இதில் களத்தில் இருந்த மனோஜ் 156 ரன்களுடனும், சக்ரபோர்ட்டி ரன் ஏதுமெடுக்காமலும் களத்தில் இருந்தனர்.நேற்று 2வது நாள் ஆட்டமானது தொடங்கியது. தன் சதத்தை இரட்டை சதமாக மாற்றினார் மனோஜ்.தொடர்ந்து களத்தில் களைப்பின்றி விளையாடிய மனோஜ் முதன்முறையாக தனது முச்சதத்தையும் பதிவு செய்து அசத்தினார். தான் எதிர்கொண்ட 414 பந்தில் 303 ரன் களை குவித்து பார்வையாளர்களையும் கிரிக்கெட் விமர்சகர்களையும் மிரளவைத்தார்.இவரது அதிரடி முச்சதத்தால் பெங்கால் 7 விக்கெட் இழப்பிற்கு 635 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இமாலய இலக்கை நோக்கி ஜதராபாத் களமிரங்க உள்ளது.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…