ipl 2023 records [Image source: file image ]
ஐபிஎல் 2023 தொடர் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று இறுதிப்போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஐபிஎல்லில் 5-வது முறையாக கோப்பையை வென்றது.
இந்நிலையில், இதுவரை நடந்த மற்ற சீசன்களை விட இந்த சீசன் மிகவும் அருமையாக இருந்தது என்றே கூறலாம். ஏனென்றால், இந்த சீசன்களில் பல இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடி பல சாதனைகளை படைத்தனர். அதைப்போலவே அணிகளும் பல சாதனைகளை படைத்துள்ளது. அது என்னென்ன சாதனை என்பதை விவரமாக பார்க்கலாம்.
அதிக ரன்கள் – மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசன் 2-வது குவாலிபஃயர் போட்டியில் வெளியே சென்றுவிட்டாலும் பல சாதனைகளை படைத்துள்ளது. அதில் ஒரு சாதனை என்னவென்றால் இந்த ஐபிஎல் 2023-இல் ஒட்டுமொத்த அணியாக இணைந்து அடித்த ரன்களில் முதலிடத்தில் உள்ளது . மொத்தமாக இந்த சீசனில் மட்டும் 2,763 ரன்கள் எடுத்துள்ளது.
அதிக சிக்ஸர்கள்- மும்பை இந்தியன்ஸ்
இந்த 2023 சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது. கிட்டத்தட்ட இந்த சீசனில் மட்டும் 140 சிக்ஸர்களை விளாசியுள்ளது.
அதிக பவுண்டரிகள் (fours) – மும்பை இந்தியன்ஸ்
அதிக சிக்ஸர்களை அடித்த அணி என்ற சாதனையை தொடர்ந்து அதிக பவுண்டரி விளாசிய அணி என்ற சாதனையையும் மும்பை இந்தியன்ஸ் தான் படைத்துள்ளது. கிட்டத்தட்ட இந்த சீசனில் 265 பவுண்டரிகளை விளாசியுள்ளது.
அதிக விக்கெட்கள் – குஜராத் டைட்டன்ஸ்
இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சை பற்றி சொல்லியே ஆகவேண்டும். அந்த அளவிற்கு மிகவும் அருமையாக குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் எதிரணியை திணறடித்துள்ளனர். மொத்தமாக இந்த சீசனில் மட்டும் 114 விக்கெட்களை வீழ்த்தியுள்ளது. அதிகபட்சமாக முகமது ஷமி 28, மோகித் சர்மா 27, ரஷித் கான் 27 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
அதிகபட்ச ரன்கள் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
இதுவரை இல்லாத அளவிற்கு இந்த சீசனில் அதிகமுறை 200 ரன்களுக்கு மேல் அடித்தது என்றே கூறலாம். அதிலும், இந்த சீசனில் அதிகபட்ச ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை லக்னோ அணி படைத்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய லக்னோ அணி 257 ரன்கள் எடுத்துள்ளது.
அதிக பார்ட்னர்ஷிப். – பெங்களூர் ( விராட் – ஃபாப்)
இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபாஃப் டு பிளெசிஸ் ,விராட் கோலி ஆகியோர் அதிரடியாக விளையாடி பல போட்டிகளில் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் – ஆக சேர்ந்து 939 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளது.
குறைந்த பட்ச ரன்கள் – ராஜஸ்தான் ராயல்ஸ்
இந்த சீசனில் குறைந்த ரன்கள் எடுத்து அட்டமிழந்த அணி என்ற சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படைத்துள்ளது. பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 59 ரன்கள் எடுத்து தனது மொத்த விக்கெட்களையும் இழந்து மோசமான சாதனை படைத்துள்ளது.
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…