ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதிவரும் நிலையில், தற்பொழுது பவர் பிளே ஓவர் முடிவில் மும்பை அணி, 3 விக்கெட்கள் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 33-வது போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மோதி வருகிறது. DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – இஷான் கிஷன் களமிறங்கினார்கள்.
இதில் 2-ம் பந்திலே ஒரு ரன் கூட எடுக்காமல் ரோஹித் ஷர்மா தனது விக்கெட்டை இழக்க, தேவால்டு களமிறங்கினார்கள். அவர் ஓங்கி அடித்த பந்தை நோக்கி ஜடேஜா செல்ல, அவரால் அந்த பந்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் அடுத்த பந்திலே அவர் அதிரடி வீரர் இஷான் கிஷன் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
அதனைதொடர்ந்து 2-ம் ஓவரில் சூரியகுமார் யாதவ் அதிரடியாக ஆட, 3-ம் ஓவரை மீண்டும் முகேஷ் சவுத்திரி வீசினார். அந்த ஓவரில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆட, மறுமுனையில் இருந்த தேவால்டின் விக்கெட்டை மீண்டும் முகேஷ் சவுத்திரி வீழ்த்தினார். தற்பொழுது பவர் பிளே ஓவர்கள் முடிவடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி, 3 விக்கெட்கள் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…