இன்று மும்பை லக்னோ மோதல்! கம்பேக் கொடுப்பாரா ரோஹித் சர்மா?

Published by
பால முருகன்

சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது.

ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17 மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், மும்மை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த சீசனில் இந்த இரண்டு அணிகளுக்கு இது தான் கடைசி போட்டியும் கூட. மும்பை அணி புள்ளி விவர பட்டியலில் 10-வது இடத்திலும், லக்னோ அணி 7-வது இடத்திலும் இருக்கிறது.

இரண்டு அணிகளும் இன்று நடைபெறும் போட்டியில் பெருமைக்காக விளையாடுவார்கள். ஏனென்றால்,  இந்த சீசனில் கொல்கத்தா அணி, ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு சென்றுவிட்டது. இன்னும் ஒரு அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இருக்கும் நிலையில், லக்னோ அணி 7-வது இடத்தில் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் பெங்களூர் அணி முன்னிலையில் இருக்கிறது.

எனவே, 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது சென்னை அணியா அல்லது பெங்களூர் அணியா என்பது தான் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த சூழலில் இன்றயை போட்டியில் மும்பை அணியும் சரி, லக்னோ அணியும் சரி பெரிய அளவில் அழுத்தம் இல்லாமல் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் 5 முறை மோதியுள்ளது. அதில் 1 முறை மட்டுமே தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்று இருக்கிறது. மீதமுள்ள 4 போட்டிகளிலும் லக்னோ அணி தான் வெற்றிபெற்று இருக்கிறது. நேருக்கு நேர் மோதிரத்தை வைத்து பார்க்கையில் அதிகமுறை லக்னோ தான் வெற்றிபெற்று இருக்கிறது.

கம்பேக் கொடுப்பாரா ரோஹித்?

நடப்பாண்டு ஐபிஎல் சீசன் முதல் பாதி அதாவது மும்பை ஆடிய முதல் 7 போட்டிகளில் தொடக்கட்ட ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் பார்ம் நன்றாக இருந்தது. ஆனால், அதனை தொடர்ந்து இரண்டாவது பாதியில் ரோஹித் சர்மாவின் பார்ம்  விமர்சித்து பேசும் அளவிற்கு இருக்கிறது. ஏனென்றால், கடைசி 6 இன்னிங்ஸ்களில் 52 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இதன் காரணமாகவே அவருடைய பேட்டிங் குறித்த விமர்சனங்களும் எழுந்துகொண்டு இருக்கிறது. ஐபிஎல் போட்டி முடிந்து அவர் டி20  உலகக்கோப்பை போட்டியிலும் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த சூழலில் அவருடைய பேட்டிங் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் மோசமாக இருப்பதாக பலரும் விமர்சித்து வரும் நிலையில் லக்னோ அணிக்கு எதிரான இந்த போட்டியில் பெரிய ரன்கள் அடித்து கம்பேக் கொடுப்பார் என அவருடைய ரசிகர்கள் காத்துள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago