மும்பை அணி தடுமாற்றம்.. சென்னை அணிக்கு 140 ரன்கள் இலக்கு!

சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய 49வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் தொடக்கத்திலேயே தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். ஆனால், மறுபக்கம் நேஹால் வதேரா நிதானமாக விளையாடி, 51 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழந்து 139 ரன்களை எடுத்துள்ளது.
சென்னை பந்துவீச்சை பொறுத்தவரையில், மதீஷ பத்திரனா 3, தீபக் சாஹர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்த நிலையில், 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.