ஹைதராபாத் 19.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 137 ரன்கள் எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மும்பை அணியில் தொடக்க வீரர்களாக டிகாக், ரோகித் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே சிறப்பாக விளையாடி வந்தனர். நிதானமாக விளையாடி வந்த ரோகித் சர்மா 32 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 10 ரன்னில் வெளியேற அடுத்த சில நிமிடங்களில் டிகாக் 40 ரன்களுடன் நடையைக்கட்டினார்.
பின்னர் மத்தியில் களமிறங்கிய பொல்லார்ட் 35 ரன்கள் எடுக்க இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் எடுத்தனர். 151 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலேயே இருவரும் அதிரடியாக விளையாடி வந்தனர்.
சிறப்பாக விளையாடி ஜானி பேர்ஸ்டோவ் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கிய மனீஷ் பாண்டே 2 ரன்னில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். நிதானமான விளையாடிய டேவிட் வார்னர் 36 ரன்னில் ரன் அவுட் ஆனார். பின்னர் இறங்கிய அனைத்து வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மத்தியில் களம் கண்ட விஜய் சங்கர் 28 ரன்கள் எடுத்தார்.
இறுதியாக ஹைதராபாத் 19.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 137 ரன்கள் எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஹைதராபாத் அணி விளையாடிய மூன்று போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது. மும்பை அணி விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றியும்,ஒரு போட்டியில் தோல்வியை பெற்றுள்ளது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…