அடுத்தடுத்து தெறிக்கும் ‘ஸ்டெம்ப்’ – இங்கிலாந்தை மிரட்டிய பும்ரா ..!

Published by
murugan

டெஸ்ட் போட்டியில் பும்ரா 101 விக்கெட்டை பறித்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதனத்தில் நடைபெற்று வருகிறது.  இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 148.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 466 ரன்கள் எடுத்தனர். இதனால், இந்திய அணி 367 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது இருவரும் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். நேற்றைய 4-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட்டை இழக்காமல் 32 ஓவரில் 77 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில், இன்று கடைசி மற்றும் 5-ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் நிதானமாக விளையாடிய  ரோரி பர்ன்ஸ் அரைசதம் அடித்து விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த டேவிட் மாலன் வந்த வேகத்தில் 5 ரன் எடுத்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய ஹசீப் ஹமீது 63 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். பிறகு களம்கண்ட ஒல்லி போப் 2, ஜானி பேர்ஸ்டோ ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து பும்ரா வீசிய பந்தில் போல்ட் ஆனார்கள். அடுத்து இறங்கிய மொயின் அலி ரன் எடுக்காமலும் விக்கெட்டை கொடுக்க, இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

பும்ரா ஒல்லி போப் விக்கெட்டை பறித்ததன் மூலம்  டெஸ்ட் போட்டியில் பும்ரா வீழ்த்திய 100-வது விக்கெட் ஆகும். இதுவரை டெஸ்ட் போட்டியில் 101 விக்கெட்டை பறித்துள்ளார். இங்கிலாந்து அணி வெற்றிபெற இன்னும் 219 ரன்கள் தேவைப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

3 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

4 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

4 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

5 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

5 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

6 hours ago