இன்று இலங்கை, இந்தியா இடையே முதல் ஒருநாள் போட்டி 3 மணிக்கு தொடங்கவுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய அணியில் அனைவருமே இளம் வீரர்களாக உள்ளனர். மேலும் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார்.
இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று 03:00 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. இப்போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெறுகிறது. இந்திய அணிக்கு தவான் கேப்டனாகவும்,புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி:
தவான் (கேப்டன்), பிரித்வி ஷா, பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, குருணால் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகியோர் உள்ளனர்.
இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியவர்கள். இதனால் பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…