இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் , தென்னாப்பிரிக்கா அணியும் மோதின. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக இமாம்-உல்-ஹக், ஃபக்கர் ஜமான் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடிய இருவரும் அணியின் ரன்களை சேர்த்தனர். இந்நிலையில் 15-வது ஓவரில் இம்ரான் தாஹிர் வீசிய பந்தை அடித்தபோது இம்ரானிடமே தனது கேட்சை கொடுத்து 44 ரன்னில் ஃபக்கர் ஜமான் வெளியேறினார். பின்னர் பாபர் ஆசாம் இறங்கினார்.நிதானமாக விளையாடிய இமாம்-உல்-ஹக் 21-வது ஓவரில் இம்ரான் தாஹிர் வீசிய பந்தை அடித்தபோது அம்லாவிடம் கேட்சை கொடுத்து 44 ரன்னில் வெளியேறினார்.
பாபர் ஆசாம் நிதானமாகவும் ,சிறப்பாகவும் விளையாடி அணியின் ரன்களை உயர்த்தி 69 ரன்னில் அவுட் ஆனார்.மத்தியில் களமிறங்கிய ஹரிஸ் சோஹைல் 59 பந்தில் 89 ரன்கள் குவித்தார்.
இறுதியாக பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 308 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சில் இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டையும் , லுங்கி ங்கிடி 3 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
50 ஓவர்களில் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரரான அம்லா 2 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாகா டீ காக் மற்றும் டுப்ளிஸிஸ் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அவர்கள் முறையே 47 மற்றும் 63 ரன்கள் விளாசினர்.
மார்க்ரம் 7 ரன்னில் வெளியேற டுசென் 36 ரன்கள் அடித்து இருந்தார். மில்லர் 31 ரன்களில் வெளியேற மோரிஸ் 16 ரன்களுடனும் வெளியேற அடுத்து வந்தவர்களும் ஒற்றை இலக்க ரன்களுடன் வெளியேற,பேலக்வயோ மட்டும் கடைசி வரை போராடி 46 ரன்கள் விளாசினார். இருந்தும் 50 ஓவர் முடிவில், 9 விக்கெட்களை இழந்து 259 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது தென் ஆப்பிரிக்கா அணி.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…