பந்து வீச்சில் மிரட்டிய இங்கிலாந்து.. 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி..!

Published by
murugan

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா  8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், இங்கிலாந்து அணியும்  கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இங்கிலாந்து அணியின் தொடங்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவும், டேவிட் மலனும் இணைந்து சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.இருப்பினும் டேவிட் மலன் 39 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் ஜோ ரூட் களமிறங்க ஜானி பேர்ஸ்டோ அரைசதம் அடித்து 59 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து  பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் கூட்டணி அமைத்தனர்.  இதில் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 76 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி 84 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இவர்கள் இருவரின் கூட்டணியில் 132 ரன்கள் சேர்க்கப்பட்டது.

மறுபுறம் விளையாடி வந்த ஜோ ரூட் அடுத்து இரண்டு ஓவரில் அரைசதம் அடித்து 60 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹாரி புரூக் 30, கேப்டன் ஜோஸ் பட்லர் 27 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்கள். அடுத்து வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டைகளை இழந்து 337 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ரவுஃப் 3 விக்கெட்டையும், முகமது வாசிம், ஷாஹீன் அப்ரிடி தலா 2 விக்கெட்டையும் பறித்தனர்.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக், ஃபகார் ஜமான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய 2-பந்திலே அப்துல்லா ஷபீக் டக் அவுட் ஆனார். பின்னர் கேப்டன் பாபர் அசாம் களமிறங்கினார். இருப்பினும் 3-வது ஓவரில் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் 1 ரன் எடுத்து பென் ஸ்டோக்கிடம் கேட்சை கொடுத்தார். இதனால் பாகிஸ்தான் அணி 10 ரன்னில் 2 விக்கெட்டை பறிகொடுத்தது.

அடுத்து இறங்கிய முகமது ரிஸ்வான் களத்தில் இருந்த கேப்டன் பாபர் அசாம்  உடன் இணைந்து சற்று ரன்களை உயர்த்தினர். நிதானமாக விளையாடி வந்தஇருவரும் அரைசதம் அடிக்காமல் அடுத்தடுத்த சில ஓவர்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்படி முகமது ரிஸ்வான் 36 ரன்களிலும் , கேப்டன் பாபர் அசாம் 38 ரன்களிலும் வெளியேறினர்.

உலகக்கோப்பையில் வெளியேறிய பாகிஸ்தான்.. 338 ரன்கள் நிர்ணயித்த இங்கிலாந்து..!

மத்தியில் இறங்கிய ஆகா சல்மான் மட்டும் நிலைத்து நின்று நிதானமாக அரைசதம் பூர்த்தி செய்து 51 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். கடைசியில் இறங்கிய ஷதாப் கான் 4, இப்திகார் அகமது 3 ரன்கள் எடுக்க இறுதியாக பாகிஸ்தான் அணி 43.3 ஓவரில் 244 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டை இழந்து 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணியில் டேவிட் வில்லி 3 விக்கெட்டையும்,  கஸ் அட்கின்சன், மொயின் அலி, அடில் ரஷித் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

Published by
murugan

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

42 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

57 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

2 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

4 hours ago