உலகக்கோப்பையில் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து அரையிறுதி தகுதிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து கேப்டன் பாபர் ஆசாமும் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
பின்னர் பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ஷஹீன் அப்ரிடியும், டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டன் ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி தங்களது முதல் டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டிசம்பர் 14 முதல் 18 வரையும் , 2-வது போட்டி டிசம்பர் 26 முதல் 30 வரையும் 3-வது போட்டி ஜனவரி 03 முதல் 07 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி:
ஷான் மசூத் (சி), பாபர், ஷஹீன், அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார், ஃபஹீம், ஹசன் அலி, இமாம், குர்ரம் ஷெஹ்சாத், மிர் ஹம்சா, ரிஸ்வான், வாசிம் ஜூனியர், நௌமன் அலி, சைம் அயூப், ஆகா சல்மான், சர்ஃபராஸ் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல் ஆகியோர் இடம்பெறுள்ளனர்.
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…