PAKvBAN : பங்களாதேஷை 204 ரன்களுக்கு சுருட்டியது பாகிஸ்தான்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 31-வது லீப் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மற்றும் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான பங்களாதேஷ் அணியும் பலப்பரீட்சை செய்து  வருகிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, களமிறங்கிய பங்களாதேஷ் அணி தொடக்கத்திலேயே ஒருபக்கம் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, மறுபக்கம் ஓப்பனிங் இறங்கிய லிட்டன் தாஸ் மற்றும் மஹ்முதுல்லாஹ் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இருப்பினும், பாகிஸ்தான் அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

#PAKvsBAN: பங்களாதேஷ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.!

இதன்பின் லிட்டன் தாஸ் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இப்திகார் அகமது ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மறுபக்கம் சிறப்பாக விளையாடிய மஹ்முதுல்லாஹ் தனது அரை சத்தை பூர்த்தி செய்து 56 ரன்கள் எடுத்திருந்தபோது ஷஹீன் அப்ரிடி பந்தில் போல்ட் ஆனார். ஆனாலும், களத்தில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தனது அனுபவத்தை பயன்படுத்தி அணிக்கு 43 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

பின்னர் வந்த வீரர்கள் பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பங்களாதேஷ் அணி 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக ஷஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர் தலா 3, ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

எனவே, இப்போட்டியில் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. பாகிஸ்தான் அணி இதுவரை நடந்த 6 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேபோல, பங்களாதேஷ் அணி 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால், இப்போட்டிக்கு இரு அணிகளுக்கும் முக்கியம் என்று கருதப்பட்டாலும், பாகிஸ்தான் அணிக்கு மிக முக்கியமாகும்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“மதுரை மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!” தவெக தலைவர் விஜயின் முதல் பேட்டி!

சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ' ஜனநாயகன்' பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…

24 minutes ago

வாட்டி வதைக்க காத்திருக்கும் வெயில்! வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய தகவல்!

சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…

58 minutes ago

”அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி” – மத்திய அரசின் புதிய உத்தரவு.!

டெல்லி : அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக,…

1 hour ago

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கு நிம்மதி! மத்திய அரசு அளித்த முக்கிய தளர்வு..,

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

2 hours ago

‘ரெட்ரோ’ ரிலீஸ்: தாரை தப்பட்டை கிழிய பால் அபிஷேகம்.., ரசிகர்கள் கொண்டாட்டம்.!

சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ' ரெட்ரோ ' படம்…

2 hours ago

அதிகரிக்கும் வெயில்.., பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அப்டேட்!

திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…

3 hours ago