டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த முதல் 5 வீரர்கள்! முதலிடத்தில் இவரா?

Published by
அகில் R

டி20I : கிரிக்கெட் போட்டிகள் என்றாலே முதலில் 50 ஓவர், டெஸ்ட் போட்டிகள் என்று தான் இருந்தது மெதுவாக செல்லும் அந்த போட்டிகளை ரசிகருக்கு மேலும் விறுவிறுப்பாக கொண்டு செல்ல இந்த 20 ஓவர் போட்டியானது கொண்டு வரப்பட்டது.

டி20 போட்டிகளில் அதிகம் கவனம் ஈர்க்கும் தொடர்களான ஐபிஎல், உள்ளூர் தொடர்கள், சுற்றுப்பயணகள் என அதனுடன் இந்த 20 ஓவர் உலகக்கோப்பையும் அடங்கும். கடந்த 2007-ம் ஆண்டு இந்த 20 ஓவர் உலகக்கோப்பையானது இந்தியாவில் முதல் முறையாக தொடங்கப்பட்டது.  2 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பையின் 9-வது டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் வருகிற ஜூன்-1 ம் தேதி தொடங்கவுள்ளது.

எந்த ஒரு ஐசிசியின் முக்கிய தொடர்களிலும் வீரர்கள் புதிய சாதனைகளை செய்வதும் அதனை வேறொரு வீரர் முறியடிப்பது வழக்கமாகவே கொண்டுள்ளது. அதன்படி இந்த டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு பவுலராகவோ இல்லை ஒரு ஆல்-ரவுண்டராகவோ அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலை பற்றி தற்போது பார்ப்போம். இந்த பட்டியலில் முதலிடத்தில் லசித் மலிங்கா, ஸ்டெயின், போன்ற முன்னணி வேக பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள் என்று நாம் எண்ணினால் அது தான் தவறு.

அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்

  • ஷாகிப் அல் ஹசன் – வங்காளதேசம் – 36 போட்டிகளில் 47 விக்கெட்டுகள்.
  • ஷாஹித் அப்ரிடி – பாகிஸ்தான் – 34 போட்டிகளில் 39 விக்கெட்டுகள்.
  • லசித் மலிங்கா – இலங்கை – 31 போட்டிகளில் 38 விக்கெட்டுகள்
  • சயீத் அஜ்மல் – பாகிஸ்தான் – 23 போட்டிகளில் 36  விக்கெட்டுகள்
  • அஜந்தா மெண்டிஸ் – இலங்கை – 21 போட்டிகளில் 35 விக்கெட்டுகள்

அதிலும் முதலிடத்தில் உள்ள வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக போட்டிகள் விளையாடிய வீரர்கள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார். மேலும் நடைபெற இருக்கும் இந்த 20 ஓவர் உலகக்கோப்பையிலும் இவர் விளையாடவுள்ளார்.

இன்னும் 3 விக்கெட்டுகளை இந்த தொடரில் அவர் கைப்பற்றினார் என்றால் டி20 உலகக்கோப்பை தொடரில் 50 விக்கெட்டுகளை எடுத்த முதல் ஆல்-ரவுண்டர் வீரர் என ஷாகிப் அல் ஹசன் புதிய சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

5 minutes ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

32 minutes ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

1 hour ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

2 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

2 hours ago

அடுத்தடுத்து 100 கோடி படங்கள்…வெற்றியின் குஷியில் நடிகர் தனுஷ்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…

3 hours ago