சாதனைகளை படைத்த உங்களை நினைத்து பெருமைப்படுவதாக தோனியின் மனைவியான சாக்ஷி பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பகிர்ந்த பதிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார். இது குறித்து ரசிகர்கள் உட்பட பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தோனியின் மனைவி இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, நீங்கள் சாதித்ததை பற்றி நீங்கள் பெருமைப்பட வேண்டும். உங்களது சிறந்த பங்களிப்பை விளையாட்டிற்கு வழங்கியதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் படைத்த சாதனைகளுக்காக உங்களை குறித்து பெருமைப்படுகிறேன். நீங்கள் விரும்பும் இந்த விளையாட்டிலிருந்து விடைபெறும் போது நீங்கள் கண்ணீர் விட்டிருப்பீர்கள் என்று நான் நம்புவதாகவும், இனி உங்களுக்கு ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் மாயா ஏஞ்சலோவின் வரிகளான ‘நீங்கள் சொன்னதை மக்கள் மறந்துவிடுவார்கள், நீங்கள் செய்ததை மக்கள் மறந்துவிடுவார்கள், ஆனால் நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…