#image_title
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் எடுத்தனர்.
இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களான பிலிப் சால்ட் 75 ரன்களும், சுனில் நரேன் 71 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 39 ரன்களும், ரசல் 24 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டையும், சாம் கரன், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
162 ரன்கள் இலக்குடன் பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் தொடக்க வீரர்கள் இருவருமே அதிரடியாக விளையாடி வந்தனர். அதில் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி 18 பந்தில் அரைசதம் விளாசினார். பவர் பிளேவின் கடைசி ஓவரில் மட்டும் 24 ரன்கள் குவிக்கப்பட்டது.
அந்த ஓவரின் கடைசி பந்தில் ரன்கள் எடுக்க முயன்ற போது பிரப்சிம்ரன் சிங் 54 பந்தில் ரன் அவுட் ஆனார். இதனால் பஞ்சாப் அணி பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 93 ரன்கள் குவித்து இருந்தனர். அடுத்து ரைலி ரோசோவ் களமிறங்கினார். அடுத்தடுத்த ஓவரில் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் சிக்ஸர் மழையாக பொழிந்தார்.
இதன் காரணமாக அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. இருப்பினும் ரைலி ரோசோவ் 13-வது ஓவரில் 26 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ஷஷாங்க் சிங் 14-வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்ஸர் விளாசினார். சிறப்பாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் 45 பந்தில் சதம் விளாசினார். அதே நேரத்தில் மறுபுறம் ஷஷாங்க் சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியாக பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். களத்தில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஷஷாங்க் சிங் 68* ரன்களுடனும், ஜானி பேர்ஸ்டோவ் 108* ரன்களுடனும் இருந்தனர். இந்த போட்டியில் மட்டும் மொத்தம் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது.
டி20 போட்டியில் 262 ரன்கள் சேசிங் செய்து பஞ்சாப் வரலாறு சாதனை படைத்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு டி20 போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கிடையே 259 ரன்கள் சேசிங் செய்தது வரலாற்று சாதனையாக இருந்தது. அதை தற்போது பஞ்சாப் அணி முறியடித்துள்ளது.
பஞ்சாப் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 போட்டியில் வெற்றியும், 6 போட்டியில் தோல்வியும் தழுவி உள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா அணி இதுவரை 8 போட்டியில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் தழுவி உள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…