குயின்டன் அதிரடி சதம்..தென்னாப்பிரிக்கா அசத்தல் பேட்டிங்.! பங்களாதேஷ் அணிக்கு இமாலய இலக்கு!

SAvsBAN: ஐசிசி ஒருநாள் உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 23வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதுகிறது. தான் விளையாடிய முதல் மூன்று ஆட்டங்களில் பேட்டிங்கை தேர்வு செய்து வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி, இந்த போட்டியிலும் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி, தென்னாப்பிரிக்கா அணியில் முதலில் குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். ஆரம்பம் முதலே குயின்டன் டி காக் சிறப்பாக விளையாட, ரீசா ஹென்ட்ரிக்ஸ் 19 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராஸ்ஸி வான் டெர் டுசென் 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
இதன்பிறகு விளையாட வந்த அணியின் கேப்டன் ஐடன் மார்க்ராம் நிதானமாக விளையாடி, குயின்டனுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். குயின்டன் அபாரமாக விளையாடி 18வது ஓவரில் அரைசதம் அடித்து விளாசினார். இதையடுத்து, குயின்டன் பவுண்டரிகளை பறக்கவிட, நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த ஐடன் மார்க்ராம் அரைசதம் கடந்தார்.
ஆட்டம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கையில் ஷாகிப் வீசிய பந்தில் மார்க்ராம் தனது விக்கெட்டை இழந்தார். ஹென்ரிச் கிளாசென் களமிறங்க, அபாரமாக விளையாடிய குயின்டன் பவுண்டரிகள் சிக்ஸர்கள் என பறக்கவிட்டு சதம் அடித்தார். தொடர்ந்து குயின்டன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இவருடன் இணைந்து ஹென்ரிச் கிளாசென் அரைசதம் கடந்தார்.
இருவரும் சிறப்பாக விளையாடி வர ஹசன் மஹ்மூத் வீசிய பந்தில் குயின்டன் 174 ரன்கள் எடுத்து களத்தை விட்டு வெளியேறினார். அவரைத்தொடர்ந்து, கிளாசெனும் சதத்தைத் தவறவிட்டு 90 ரன்களுடன் ஆட்டமிழந்தார். மில்லர் மற்றும் மார்கோ ஜான்சன் களத்தில் நின்று இறுதிவரை விளையாடினார்கள். முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 382 ரன்கள் குவித்தது.
இதில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் 174 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 90 ரன்களும், ஐடன் மார்க்ராம் 60 ரன்களும், மில்லர் 34 ரன்களும் குவித்துள்ளார்கள். பங்களாதேஷ் அணியில் ஹசன் மஹ்மூத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது, பங்களாதேஷ் அணி 383 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல் 2025 அட்டவணை வெளியீடு! சென்னை -மும்பை மோதும் போட்டி எப்போது?
February 16, 2025
கோப்பை இந்தியாவுக்கு தான்…ஹர்திக் பாண்டியா சம்பவம் பண்ண போறாரு! மைக்கல் கிளார்க் பேச்சு!
February 16, 2025
அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி! பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்!
February 16, 2025