Dhoni - RinguSingh [Image Source: X/@CricCrazyJohns]
ஒருநாள் உலககோப்பையைத் தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியானது விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் மேத்யூ வெயிட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது. இதில் ஸ்டீவன் ஸ்மித் அரைசதம் அடித்தார். ஜோக்ஸ் இங்கிலீஷ் ஒரு படி மேலே சென்று, 50 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என பறக்க விட்டு 110 ரன்கள் குவித்தார். முடிவில் ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி திறம்பட செயல்பட்டு இந்த ஸ்கோரை முறியடித்தது. இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் இருவரும் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்ததோடு, அணியை முன்னிலைப்படுத்தும் வகையில் ரன்களை அடித்தனர்.
ரிங்கு சிங் கடைசி ஓவர் வரை நின்று பொறுப்பாக விளையாடி, 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டச் செய்தார். முடிவில் இந்தியா 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 209 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரில் தற்போது 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், ஒரு இன்னிங்ஸின் முடிவில் ரின்கு சிங் பொறுமையாக இருப்பது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியுடனான உரையாடல் தான், தன்னை கடைசி ஓவரில் நிதானமாக செயல்பட உதவியது என்று கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, “நான் ஒரு முறை தோனியிடம் பேசி இருந்தேன். ஒரு போட்டியின் கடைசி ஓவரில் அவர் என்ன செய்கிறார் என்று அவரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் முடிந்தவரை அமைதியாக இருக்க வேண்டும். எந்த பந்தையும் நேராக அடிக்க முயற்சிக்க வேண்டும். எந்தவொரு விஷயத்துக்கும் அமைதியாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் கடைசிவரை பின்பற்ற முயற்சிக்கிறேன். அது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது.” என்று ரிங்கு சிங் கூறினார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…