Rohit Sharma [file image]
ரோஹித் சர்மா: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் பிசிசிஐ 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்திருந்தது. அந்த அணியில் அக்சர் பட்டேல், குலதீப் யாதவ், ஜடேஜா மற்றும் சஹல் என 4 ஸ்பின்னர்கள் இடம் பெற்றுருந்தனர். அந்த அணியை கண்ட ரசிகர்கள் பலரும் அப்போது பல சர்ச்சையான கேள்விகளை எழுப்பினார்கள்.
அதன்பின் அணியின் தலைமை பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட்டும், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருந்தனர்.
அதில், பத்திரிகையாளர்கள் எதற்கு இந்திய அணியில் 4 ஸ்பின்னர்கள் என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அப்போது இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, இதை நான் இப்போது சொல்லமாட்டேன் வெஸ்ட் இண்டீஸில் விளையாடிய பிறகு சொல்கிறேன் என அப்போது கூறி இருந்தார்.
இது நேற்று நடைபெற்ற 2-ஆம் அரை இறுதி போட்டியில் அவர் கூறியதற்காக அர்த்தம் புரியவந்துள்ளது. நேற்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் இந்திய அணி முதலில் விளையாடி 171 ரன்கள் எடுத்தது. அதன்பின் பேட்டிங் களமிறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்து 10 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.
இதற்கு மிகமுக்கிய காரணம் சுழல் பந்து வீச்சாளர்களான அக்சரும், குலதீப்பும் தான். இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தனர். அதிலும், இந்த 6 விக்கெட்டுகளும் மிகமுக்கிய விக்கெட்டுகள் ஆகும். இதனால், இங்கிலாந்து அணியை 103 ரன்களுக்கு இந்திய அணி சுருட்டியது.
இதன் மூலம் அவரது ரசிகர்கள் அன்று பத்திரிகையாளரிடம் ரோஹித் சர்மா அப்படி கூறியதற்கு இதுதான் காரணம் எனவும் அவரது அணியின் தேர்வு சரியாகத்தான் இருக்கும் எனவும், அன்று எழுந்த அந்த சர்ச்சையான கேள்விக்கு இன்று விளையாட்டின் மூலம் அவர் பதிலளித்துள்ளார் எனவும் அவரது ரசிகர்கள் இணையத்தில் அவர்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…