கடந்த 4 ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடியுள்ளார்…விராட் கோலி புகழாரம்.!!

virat kohli and rohit sharma test

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.இந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகிறது. போட்டி இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கப்படவுள்ள நிலையில். இரண்டு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவைப் பற்றி சக வீரரான விராட் கோலி பேசியுள்ளார்.  இது குறித்து பேசிய அவர் “கடந்த மூன்று-நான்கு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் செயல்பாடு மிகவும் அருமை. டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஒரு அற்புதமாக விளையாடியுள்ளார்.

மேலும் ரோஹித் ஷர்மா 2019 முதல் 36 இன்னிங்ஸ்களில் 6 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் 52.76 சராசரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி(முழு விவரம்):

ரோகித் சர்மா (C), ரவிச்சந்திரன் அஷ்வின், கே.எஸ்.பரத், ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, இஷான் கிஷன், சேதேஷ்வர் புஜாரா, அக்சர் படேல், அஜிங்க்யா ரஹானே, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனடக்ட், உமேஷ் யாதவ்.

ரிசர்வ் வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்

ஆஸ்திரேலிய அணி(முழு விவரம்):

பேட் கம்மின்ஸ் (C), ஸ்காட் போலன்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சன், நாதன் லியோன், டாட் மர்பி, மைக்கேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்