ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், பலம், பலவீனம் மற்றும் எதிர்பார்க்கப்படும் XI குறித்த ஒரு பார்வை.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. டெல்லி – ராஜஸ்தான் அணிகள், இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் டெல்லி அணி 11 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.
பலம் மற்றும் பலவீனம்:
டெல்லி கேபிட்டல்ஸ்:
சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் டெல்லி அணி அதிரடியாக ஆடியது. இதனால் இதேவேகத்தில் வெற்றிப்பயணத்தை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆடரை பொறுத்தளவில் ரிஷப் பந்த், ஸ்டாய்னிஸ், ஹெட்மயர், ரஹானே சிறப்பாக ஆடிவரும் நிலையில், அணியின் ஸ்கொர் எகிற வாய்ப்புள்ளது.
பந்துவீச்சில் அவேஷ் கான், கிறிஸ் வோக்ஸ், ஸ்டாய்னிஸ், மற்றும் டாம் கரண் ஆகியோர் பலமாக இருக்கின்றனர். சுழற்பந்துவீச்சில் அஸ்வின் மற்றும் மிஸ்ரா கூடுதலாக கைகுடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
எதிர்பார்க்கப்படும் XI:
ஷிகர் தவான், பிருத்வி ஷா, ரஹானே, ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ், சிம்ரான் ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், அஸ்வின், டாம் கரண், அமித் மிஸ்ரா, அவேஷ் கான்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ராஜஸ்தான் அணி, கடந்த போட்டியில் பஞ்சாப் அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் விலகியது அணிக்கு பின்னடைவு. மேலும், பந்துவீச்சில் ஆர்ச்சரும் இல்லாதது, அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கேப்டன் சஞ்சு சாம்சன், கடந்த போட்டியில் ஒற்றை ஆளாக நிண்டு சதம் அடித்து, நல்ல பார்மில் உள்ளார். பட்லர், வோரா, பராக் ஆகியோர் கடந்த போட்டியில் அந்தளவு விளையாடாத நிலையில், இன்று அடிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பவுலிங்கில் சக்காரியா, கிறிஸ் மோரிஸ் சிறப்பாக இருந்து வருகின்றனர். ஆயினும், துபே, ரஹ்மான் கைகொடுக்க வேண்டியது அவசியம். சுழற்பந்துவீச்சில் ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் திவாட்டியா ரன்களை கொடுப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.
எதிர்பார்க்கப்படும் XI:
ஜோஸ் பட்லர், மனன் வோரா, சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் தெவதியா, சிவம் டியூப், ஸ்ரேயாஸ் கோபால், கிறிஸ் மோரிஸ், முஸ்தாபிஸூர் ரஹ்மான், சேதன் சக்காரியா.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…