சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சினுக்கு ஹால் ஆஃப் ஃ பேம் விருது வழங்கியது.இந்நிலையில் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் ஹால் ஆஃப் ஃ பேம் பட்டியலில் சச்சின் இடம் பெற்றதற்கு எனது மனமார்ந்த நன்றிகள் உங்கள் சாதனைகள் பல விளையாட்டு வீரர்களுக்கு ஒரு முன் உதாரணமாகும்.
மேலும் இதே போல மாநிலங்களவை பதவிக் காலத்தில் நீங்கள் விவாதங்களில் பங்கேற்று இருந்தால் அந்தப் பதவியும் சிறப்பாக இருந்திருக்கும் என கூறினார் நீங்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இருந்தால் அந்த உரை இந்தியாவை உற்று நோக்கி இருக்கும் என கூறினார்.
சச்சின் டெண்டுல்கர் 2012-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி முதல் 2018 ஏப்ரல் 26-ஆம் தேதி வரை மாநிலங்களவை எம்பி பதவியில் இருந்தார். பதவியில் இருந்த அந்த காலகட்டத்தில் குறைந்த நாட்கள் மட்டுமே அவைக்கு சென்றுள்ளார்.
சச்சின் ஆறு ஆண்டுகளில் 8 சதவீத நாட்கள் மட்டுமே அவைக்கு சென்று இருந்தார்.மேலும் அவையில் நடைபெற்ற எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை இதனால் சச்சின் மீது அதிக குற்றச்சாற்றுகள் எழுந்தன.
இந்நிலையில் மத்திய இணையமைச்சர் பாபுல் மறைமுகமாக சச்சின் மாநிலங்களவை பதவி செயல்பாட்டை விமர்சித்துள்ளார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…