#IPL2021: ஐபிஎல் ஏலத்தில் சச்சின் மகன் அர்ஜுன் தேர்வு.. ஆதார விலை எவ்வளவு தெரியுமா?

Default Image

ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி, கொரோனா பரவல் காரணமாக அமீரகத்தில் நடைபெற்றது. தற்பொழுது 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகளை ஐபிஎல் நிர்வாகம் தொடங்கியுள்ளது. அந்தவகையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணியும் தங்களின் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் பிசிசிஐ, 2021 ஆம் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. மொத்தமாக 1,114 வீரர்கள் இந்த ஏலத்திற்கு பதிவு செய்துள்ளார்கள். அதில் 292 வீரர்களை தேர்வு செய்து, அந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.

இவர், தனது அறிமுக தொடரான சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய அவர், இரண்டு போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். மேலும், இவரின் ஆதார விலை ரூ.20 லட்சம் ஆகும். மேலும் அர்ஜுன், வரும் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இடம்பெறவில்லை.

அர்ஜுன் டெண்டுல்கரை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அதுமட்டுமின்றி, ஐபிஎல்ஏலத்தில் புஜாராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரின் ஆரம்பத்தொகை, ரூ.50 லட்சமாகும். இதில் அதிகபட்சமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 53.20 கோடி ரூபாயை வைத்துள்ளது. குறைந்தபட்சமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தங்களிடம் 10.75 கோடி ரூபாயை வைத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05122024
vijaya (21) (1)
T. M. Anbarasan
Pattinampakkam Youngster Died
rohit ravi shastri
gold price dec 5
Pushpa 2 Twitter Review