ind vs zim [file image]
IndvZim : ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 6-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டனர்.
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கு சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரை அணியில் எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஜூலை 6 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கும் வரவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான ஜிம்பாப்வே செல்லும் அணியில் சேர முதலில் திட்டமிடப்பட்டது, இந்த மூவரும் ஹராரேவுக்கு புறப்படுவதற்கு முன்பு ICC T20 உலகக் கோப்பை வென்ற மற்ற இந்திய அணியுடன் முதலில் இந்தியாவுக்குச் செல்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேக்கு எதிரான 1-வது மற்றும் 2-வது டி20 போட்டிக்கான இந்திய அணி
சுப்மேன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், துருவ் ஜூரல் (WK), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா (WK) , ஹர்ஷித் ராணா
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…