இந்திய – தென்னாபிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்று மழையால் நான்காம் நாள் ஆட்டம் தாமதம்.
தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 202 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி 79.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 229 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 7, முகமது ஷமி 2 , பும்ரா 1 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினர். நேற்று 3-ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 266 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டை இழந்தது.சிறப்பாக விளையாடிய புஜாரா 53, ரகானே 58 ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
இதனால், தென்னாபிரிக்கா அணிக்கு 240 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று மீதம் இருந்த நேரத்தில் தென்னாபிரிக்கா 2 விக்கெட்டை இழந்து 118 ரன்கள் எடுத்திருந்தது. தென்னாபிரிக்கா வெற்றி பெற 122 ரன்கள் மட்டுமே தேவைப்படும் போது, வாண்டரர்ஸில் இன்று மழை பெய்து வருவதால் நான்காம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…