இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் அதிரடியாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடிய ரோஹித் 12-வது ஓவரில் லஹிரு குமாரிடம் போல்ட் ஆகி 44 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் 111 ரன்கள் எடுத்தனர். பின்னர், ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் விளாசி சிறப்பாக விளையாடியதால் சதம் விளாசுவர் என எதிர்பட்டப்பட்ட நிலையில் 56 பந்தில் 89 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அதில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும்.
பின்னர் களத்தில் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடிய 25 பந்தில் அரைசதம் விளாசி 57* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். 200 ரன்கள் இலக்குடன் இலங்கை களமிறங்கவுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…