பஞ்சப் அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 168 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரரான சுப்மான் கில் 7 ரன்கள் அடித்து வெளியேறினார்.
இதன்பின் வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 67 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து, ராகுல் திரிபாதி 34 ரங்களில் அவுட்டான நிலையில் இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 3, ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து ஒரு புறம் மயங்க் அகர்வால் அதிரடி விளையாட , மறுபுறம் கே.எல் ராகுல் நிதானமாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 3 சிக்ஸர், 3 பவுண்டரி விளாசி 40 ரன்னில் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை நிக்கோலஸ் பூரன் 12, மார்க்ரம் 18, தீபக் ஹூடா 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்து தமிழக வீரர் ஷாரு கான் களமிறங்கினார். கேப்டன் கே.எல் ராகுல் மட்டுமே ஆட்டம் முழுவதும் நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாடி அரைசதம் விளாசி 67 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் விக்கெட்டை இழந்தார். இதனால், 4 பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷாரு கான் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். இறுதியாக பஞ்சப் அணி 19.3 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 168 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி 2 , சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர் தலா 1 விக்கெட்டை பறித்தனர். இதனால் பஞ்சாப் அணி 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு சென்றது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…