மூன்றாவது போட்டியில் திணறி 228 ரன்கள் இலக்காக வைத்த தென் ஆப்ரிக்கா!

Published by
murugan

இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி மோதி வருகிறது. இப் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் தென் ஆப்ரிக்கா அணியின் தொடக்க வீரர்களான குவின்டன் டி காக், ஹாஷிம் அம்லா இருவரும் களமிறங்கினர்.ஆட்டத்தின் தொடக்கத்திலே இருந்து தடுமாறி விளையாடினர்.பின்னர் ஹாஷிம் அம்லா 6 ரன்னில் நான்காவது ஓவரில் பும்ராவிடம் விக்கெட்டை பறி கொடுத்தார்.
பின்னர் ஆறாவது ஓவரில் குவின்டன் டி காக் 10 ரன்னில் பும்ராவிடம் விக்கெட்டை பறி கொடுத்தார்.பிறகு களத்தில் நிதானமாக விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் டூ பிளெசிஸ் , ரேசி வான் டெர் டஸன் அணியின் எண்ணிக்கை சற்று உயர்த்தினார்.

ஆனால் இவர்களின் கூட்டணியை சஹால் 20-வது ஓவரில் டூ பிளெசிஸ் 38 ரன்னிலும் , டெர் டஸன் 22 ரன்னிலும் வீழ்த்தினார். தென்ஆப்ரிக்கா அணியில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 42 ரன்கள் எடுத்தார்.இறுதியாக தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் பந்து வீச்சில் சஹால் 4 விக்கெட்டையும்,  பும்ரா,புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.228 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

Published by
murugan

Recent Posts

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

53 minutes ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

1 hour ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

2 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

3 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

3 hours ago

ஈரான் தலைவர் உயிரை காப்பாற்றியதே நான் தான்! – ட்ரம்ப் போட்ட பதிவு!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…

4 hours ago