ஐபிஎல் தொடரில் 5-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், 210 ரன்கள் எடுத்தால் வற்றி என்ற கடின இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது.
ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 5-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் களமிறங்கினார்கள்.
இதில் முதல் ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய நோ-பால், பட்லரின் விக்கெட்டை காப்பாற்றியது. இதனால் பட்லர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் இருந்த ஜெய்ஸ்வால் 20 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் 35 ரன்கள் எடுத்து பட்லர் வெளியேற, அவரையடுத்து அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்க, மறுமுனையில் படிக்கல் களமிறங்கினார்கள். இவர்களின் கூட்டணி சிறப்பாக ஆடி, அணியின் ஸ்கொரை உயர்த்தினார்கள்.
55 ரன்கள் அடித்து சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழந்த நிலையில், அவரைதொடர்ந்து களமிறங்கிய ஹெட்மேயர், அதிரடியாக ஆடி 32 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் அடித்தனர். 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…