இன்றைய போட்டியில் பெங்களூர் அணி, 16.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 68 ரன்கள் எடுத்தது. 69 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது.
ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 36-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த தொடரில் 7-வது முறையாக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபாப் டூ பிளேஸிஸ் – அனுஜ் ராவத் களமிறங்கினார்கள். 5 ரன்கள் அடித்து டூ பிளேஸிஸ் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் களமிறங்கிய விராட் கோலி, அனுஜ் ராவத் டக் அவுட் ஆகினார்கள்.
அவர்களைதொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 12 ரன்களிலும், பிரபுதேசாய் 13 ரன்கள் எடுத்து தங்களின் விக்கெட்டை இழக்க, தினேஷ் கார்த்திக் களமிறங்கி அணியின் ஸ்கொரை உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் டக் அவுட் ஆனார். அவர்களைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியாக பெங்களூர் அணி, 16.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 68 ரன்கள் எடுத்தது.
69 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. 2017-ம் ஆண்டு இதே நாளில் பெங்களூர் அணி, பெங்களூர் அணி, 49 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியிலும் விராட் கோலி டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…