இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 81 ரன்கள் எடுத்தனர்.
இன்று இந்திய ,இலங்கை அணிகளுக்கு இடையில் கடைசி மற்றும் 3-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாச மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தவான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் தொடக்க வீரராக தவான்,ருதுராஜ் கெய்க்வாட் இரு களமிறங்கினர். ஆனால் தவான் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய , பாடிக்கல், 9 ரன்னிலும், சஞ்சு சாம்சன் ரன் எடுக்காமலும், அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். நிதானமாக விளையாடிய வந்த ருதுராஜ் 14 ரன்னில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதனால் இந்திய அணி 25 ரன்னில் 4 விக்கெட்டை பறிகொடுத்தது. பின்னர் களமிறங்கிய புவனேஷ் குமார் சிறப்பாக விளையாடி 16 ரன்கள் எடுத்தார். அடுத்து களம் கண்ட நிதீஷ் ராணா 6 ரன்னிலும், ராகுல் சாஹர் 5, வருண் சக்கரவர்த்தி ரன் எடுக்காமலும் விக்கெட்டை பறிகொடுக்க இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 81 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 23* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். 82 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…