ENGvsSL 1st half [File Image]
ENGvsSL: 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 25 ஆவது லீக் போட்டியானது இன்று பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் நேருக்கு நேர் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணியில் முதலில் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி அணிக்கு ஓரளவு ரன்கள் எடுத்த நிலையில், டேவிட் மாலன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரையடுத்து களமிறங்கிய ஜோ ரூட்டும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.
இதன்பிறகு பென் ஸ்டோக்ஸ் களமிறங்கி சிறப்பாக விளையாட, பேர்ஸ்டோவ் ராஜிதா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் களமிறங்கி பெரிதாக சோபிக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். ஒரு கட்டத்தில் பொறுப்பாக விளையாடி வந்த பென் ஸ்டோக்ஸும் தனது விக்கெட்டை இழந்தார்.
இவரைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் இலங்கை அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 156 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 30 ரன்களும் எடுத்துள்ளார்கள். இலங்கை அணியில் தங்களது அபாரமான பந்து வீச்சால் லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும், மேத்யூஸ் மற்றும் ராஜிதா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். தற்போது 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இலங்கை அணி களமிறங்கியுள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…