முக்கியச் செய்திகள்

தென்னாப்பிரிக்காவிற்கு பெரிய அடி…அரையிறுதியில் இந்த வீரர் வெளியேற வாய்ப்பு ..!

Published by
murugan

2023 உலகக்கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 5 அணிகள் வெளியேற்றப்பட்டுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. நியூசிலாந்தும் அரையிறுதியில் விளையாடுவது  கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால் இன்று பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இருந்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

அரையிறுதி ஆட்டங்கள் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா 9 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய  கடைசி போட்டிக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அரையிறுதி 2-வது போட்டியில் மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவை தென்னாப்பிரிக்கா எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா விளையாடுவது கடினம் என கூறப்படுகிறது.  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பவுமாவுக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது. முதல் இன்னிங்ஸில் பீல்டிங் செய்தபோது ​​முதல் 9 பந்துகளுக்குப் பிறகு பவுமா மைதானத்தை விட்டு வெளியேறினார்.

பின்னர் பவுமா நான்கு ஓவர்களுக்குப் பிறகு மைதானத்திற்கு திரும்பினார். பீல்டிங் செய்யும் போது நொண்டி கொண்டு பீல்டிங் செய்தார். இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 244 ரன்கள் குவித்தது. 245 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில்  28 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்து முஜீப் உர் ரஹ்மானிடம் பவுமா விக்கெட்டை கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.

Published by
murugan

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

1 hour ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

2 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

3 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

5 hours ago