‘தயாரா இரு ..’ முன்கூட்டியே ஹின்ட் கொடுத்த ‘தல’ தோனி ..!

Published by
அகில் R

IPL 2024 : ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்த தொடங்கவுள்ளது. சென்னை, பெங்களூரு இடையே நடக்கவுள்ள இந்த போட்டியானது மிக பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது.  குறிப்பாக சென்னை அணி ரசிகர்கள் ‘தல’ தோனி எப்படி விளையாட போகிறார், எந்த விக்கெட்டிற்கு விளையாட போகிறார் என்று கடும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் அதே வேலையில் சென்னை அணியின் புதிய கேப்டன் ஆன ருதுராஜ் கெய்வாட் எப்படி சென்னை அணியை கொண்டு செல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பிலும் இருந்து வருகின்றனர்.

Read More :- எங்களுக்கே தெரியாதுங்க..’எல்லாம் தோனி முடிவு தான்’ ! சிஸ்கே CEO காசி விஸ்வநாதன் பேச்சு!

இந்நிலையில் இன்று,  ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோவில் சென்னை அணியின் எதிர்பாராத கேப்டன் மாற்றம் குறித்து சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ஆன ருதுராஜ் கெய்வாட் பேசி இருந்தார். அவர் கூறுகையில், “நான் அணியில் புதிதாக எதையும் மாற்ற வேண்டும் என நினைக்கவில்லை. கடந்த 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போதே தோனி எங்களுக்கு அடுத்த வருட சென்னை அணியின் கேப்டன் குறித்தும் ஐபிஎல் தொடர் குறித்தும் ‘எல்லாவற்றிக்கும் தயாரா இரு’ என்று இது போன்ற ஹின்ட்ஸ்களை (Hints)  அவ்வப்போது கொடுத்தார்.

Read More :- ருதுராஜிக்கு கேப்டன் பதவி கொடுத்ததில் ஆச்சிரியம் இல்லை… ரவிச்சந்திரன் அஸ்வின்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பேஸ்புக்கில் ‘நியூ ரோல்’ (New Role) பற்றி குறிப்பிட்டியிருந்தார். அதன் விளைவாக என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் நீ தான் அடுத்த சென்னை கேப்டானா என்று கேள்வி எழுப்பினார்கள். நானும் அவர் வேறு ஏதோ செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இந்த ஆண்டு பயிற்சி முகாமிற்கு அவர் வந்தவுடன் என்னை தனியாக சில பயிற்சி போட்டிகளில் ஈடு பட வைத்தார்.

Read More :- CSKvsRCB : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்! இப்படி இருந்த சூப்பர் தான் ..!

மேலும், அவர் என்னை சென்னை அணியின் கேப்டனாக இருக்க முடிவு செய்து விட்டார். அதனால் தான் நான் இன்று இங்கு இருக்கிறேன் மற்றும் வருகிற ஐபிஎல் போட்டிகளை எதிர்த்து காத்து கொண்டிருக்கிறேன்”, என்று ஐபிஎல் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருந்தார்.  மேலும், ருதுராஜ் நடைபெறும் போகும் போட்டியை குறித்தும், ஆர்சிபி அணியினை கேப்டன் டு பிளெசிஸ் குறித்தும் பேசி இருந்தார்.

Recent Posts

ட்ரம்ப்புடன் மோதல்..புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்த எலான் மஸ்க்!

நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…

43 minutes ago

பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ்! எம்எல்ஏ அருளுக்கு இடம்!

திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…

1 hour ago

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

16 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

16 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

17 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

17 hours ago