De Kock Wife Smart Watch Warning[file image]
IPL 2024 : லக்னோ உடனான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது டி காக் மனைவியின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியான லக்னோ-சென்னை அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் லக்னோ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி முதலில் விக்கெட்டுகளை இழந்து 90-5 என தடுமாறி வந்தது. அதன் பிறகு ஜடேஜா மற்றும் மொயின் அலியின் கூட்டணியில் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இந்த ஐபிஎல் தொடர் தொடக்கத்தில் இருந்தே இறுதி கட்டத்தில் களமிறங்கி ரசிகர்களுக்கு சிக்ஸர், பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வேலையை எம்.எஸ்.தோனி செய்து வருகிறார். அதே போல நேற்றைய போட்டியிலும் அவர் 18-வது ஓவரின் கடைசி பந்தில் களமிறங்கினார். அவரை மைதானத்தில் இருக்கும் பெரிய திரையில் காட்டினாலே, மைதானத்தில் இருக்கும் ரசிகர்களின் சத்தம் பெரிதாக இருக்கும்.
அதே நேரம் அவர் களமிறங்கிறார் என்றால் மைத்தனத்தில் இருக்கும் ரசிகர்களின் ஆரவாரத்தின் சத்தம் மைதானத்தையே உலுக்கும் அளவிற்கு இருக்கும். நேற்றும் அதே போல தோனி களமிறங்கும் பொழுது வழக்கத்திற்கு மாறாக சத்தம் உச்சத்தை தொட்டது. லக்னோ அணியின் வீரரான டி காக்கின் மனைவி சாஷா டி காக்கின் ஸ்மார்ட் வாட்ச் ஒரு வார்னிங் கொடுத்துள்ளது. அதை புகைப்படம் எடுத்து அதனை அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு உள்ளார்.
அந்த புகைப்படத்தில் அவரது ஸ்மார்ட் வாட்சில் ஒரு வார்னிங் மெசேஜ் ஒன்று வந்திருக்கும். அந்த மெசேஜில் “சுற்றுச்சூழலின் ஒலி அளவு 95 டெசிபல்களை (Decibal) தாண்டி உள்ளது. இந்த நிலையை இன்னும் 10 நிமிடங்களுக்கு நீடித்தால் தற்காலிகமாக காது கேளாமை ஏற்பட வாய்ப்புள்ளது” என்று இருக்கும். தற்போது அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பதிவிட்ட இந்த புகைப்படம் வைரலாகி ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய போட்டியிலும் தோனி அதிரடியாக விளையாடி 9 பந்துக்கு 3 ஃபோர், 2 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் எடுத்திருப்பார். மேலும், அவர் 311.11 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…