MS Dhoni's request to the fielders! [Image Source : PTI]
வீரர்கள் என்னை எரிச்சலூட்டும் கேப்டனாக பார்க்க வாய்ப்புள்ளது என நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பின் தோனி பேச்சு.
ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இதில், சென்னை அணி, குஜராத்தை வீழ்த்தி 15 வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இதையடுத்து, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின் பேசிய சென்னை கேப்டன் தோனி, ஐபிஎல் தொடர் மிகப் பெரியது, மற்ற தொடர்களை போல இந்த தொடரின் இறுதிப் போட்டி என்பது சாதாரண விஷயம் கிடையாது. இந்த வெற்றிகள் எல்லாம் எங்களின் 2 மாத கடின உழைப்பு தான் காரணம். இதற்கு அனைவரும் பங்களித்துள்ளனர் என்றார்.
தொடர்ந்து பேசிய தோனி, வீரர்கள் என்னை எரிச்சலூட்டும் கேப்டனாக பார்க்க வாய்ப்புள்ளது, ஏனென்றால் ஒவ்வொரு பந்துக்கும் ஃபீல்டிங்கை மாற்றிக்கொண்டே இருப்பேன். என் உணர்வுகளுக்கு தோன்றும் விதமாக நான் ஃபீல்டிங்கை அமைப்பேன். அது பல நேரங்களில் அணிக்கு பயனளித்தும் உள்ளது. இதனால், நான் ஃபீல்டர்களிடம் வைக்கும் ஒரே கோரிக்கை, உங்களின் கவனம் எப்போதும் என் மீது இருக்க வேண்டும், கேட்ச் விட்டால் கூட நான் பெரிதும் ரியாக்ட் செய்ய மாட்டேன், ஆனால், என் மீது இருந்து பார்வையை மட்டும் எடுத்து விடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஓய்வு குறித்த கேள்விக்கு, இதைப்பற்றி முடிவெடுக்க 8, 9 மாதங்கள் உள்ளது. இடையில் சிறிய ஐபிஎல் ஏலம் உள்ளது. ஏன் இப்போதே அதைப்பற்றி யோசித்து, தலைவலி ஏற்படுத்திக்க வேண்டும். விளையாடுவதாக இருந்தாலும் சரி, அல்லது நிர்வாக பொறுப்பாக இருந்தாலும் சரி, எப்போதும் சென்னை அணியோடு இருப்பேன் என தெரிவித்திருந்தார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…